வனப்பு மிகுந்த ஆறிது - போகும்
வழியெல்லாம் பசுமைதந்த ஆறிது
மீனுக்கு வீடாயான ஆறிது - நாவறண்ட
செடிகொடியின் தாகம்தீர்த்த ஆறிது
உடல்கள் கறைபோக்கிய ஆறிது - உடுத்தும்
உடுப்புகளை வெள்ளையாக்கிய ஆறிது
அருமருந்தை சுமந்துவரும் ஆறிது - சாறுகொண்டு
உயிர்கள் பிணிநீக்கும் ஆறிது
தண்ணீரால் நிரம்பிய ஆறிது - உழவன்
வியர்வையைப் பயிராக்கிய ஆறிது
நிற்காமல் செல்லுகின்ற ஆறிது - அழுக்கை
வடிகட்டி நல்லூற்றாகிய ஆறிது
விளையாட்டு திடலாகிய ஆறிது - சிறுவர்
மீன்களோடு நீந்திபழகிய ஆறிது
ஓடம்செல்ல பாதைதந்த ஆறிது - ஓடம்போல
வாழ்க்கையென பாடம்சொன்ன ஆறிது
வற்றாமல் பயணித்த ஆறிது - இன்று
நீரின்றி புல்முளைத்து போனது
வறியோர்க்கும் சொந்தமான ஆறிது - இன்று
குள்ளநரிகளின் கைப்பிடிக்குள் போனது
அணைக்குள் கைதாகிய ஆறிது - குடிசைகளை
அடியோடு மறந்துவிட்ட ஆறிது
பட்டணம் பார்க்கப்போன ஆறிது - நகருக்குள்
புட்டியில் வலம்வரும் ஆறிது
பாலையைச் சோலையாக்கிய ஆறிது - ஆக்கிய
சோலையை பாலையுமாக்கிய ஆறிது
சுவடின்றி காணாமற்போன ஆறிது - ஏழையின்
சிரிப்பையுங் காணாமலாக்கிய ஆறிது
என் விரல்கள் எழுதினால்...
யார் சொல்லியும் கேட்கா உலகு, நான் சொல்லியா கேட்கப் போகிறது? தெரிந்தே பேனா எடுத்தேன்; மை நிரப்பினேன்; என் விரல்கள் எழுத ஆரம்பித்தன. என் வரிகள் மாற்றத்தை கொண்டுவர உருவாக்கப் பட்டவை அல்ல, என் மனதின் ஏக்கங்களை சொல்லும் ஊடகமாய் தான் என் கவிதைகளைப் பார்க்கிறேன்.
Friday, November 14, 2008
Tuesday, November 11, 2008
பொக்கைவாய் சிரிப்பு!
மழலையின் முதல்நடையில் தாய்கொண்ட சிரிப்பு
தேர்வினில் வெற்றிபெற்ற மாணவனின் சிரிப்பு
அழகுராணி பட்டம்பெற்ற அழகியின் சிரிப்பு
காதலியின் முதல்முத்தத்தில் அவன்பூத்த சிரிப்பு...
அத்தனை சிரிப்பிற்கும் சற்றும் சளைக்கவில்லை
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!
சிரிப்பையுங் காசாக்கும் நடிகனின் சிரிப்பு
குருவிற்கு பயந்த மாணவனின் சிரிப்பு
உழைப்பாளி உயிர்பிழியும் முதலாளியின் சிரிப்பு
ஒட்டுபெற வாக்களிக்கும் அரசியல்வாதியின் சிரிப்பு...
அத்தனை சிரிப்பினையும் போலியாய் ஆக்கியது
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!
சுருங்கிய கண்இமைகளும் தோலில்லா நரம்புகளும்
தளர்ந்த நடையும் கூனியத் தோள்களும்
தெளிவில்லா குரலும் பல்லில்லா வாயும்
கிழவனை அருவருப்பாய் காட்டும் அடையாளங்கள்...
அத்தனை அடையாளங்களையும் அழகாய் காட்டியது
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!
வயதெனும் பள்ளத்திலே காமமெனும் தண்ணீரிலே
குளிக்கையிலே உடலன்றி தெரியவில்லை
வயோதிக மேட்டினின்று காதலியைப் பார்கையிலே
உடலிச்சை இல்லாமல் மனமொன்றே தெரியும்
உடல்தாண்டி உணர்வுகளை ஆராதிக்கும்
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!
சிறிதும் கள்ளம் கபடம் இல்லாதது!
குழந்தையின் சிரிப்பைபோல தீங்கிலாதது!
எதிர்பார்ப்பு ஏதுமில்லை ஏமாற்றும் எண்ணமில்லை
தானென்ற அகந்தையில்லை சுயநலம் சிறிதுமில்லை
அனுபவித்த வாழ்கையில் இன்னும்பெற ஆசையில்லை
நல்லதையே சிந்திக்கும் நல்லதையே போதிக்கும்
அனுபவத்தால் நிரம்பிய கிழவன் சிரிப்பில்
தீமையின் அறிகுறிகள் அணுகூட இருப்பதில்லை.
தேர்வினில் வெற்றிபெற்ற மாணவனின் சிரிப்பு
அழகுராணி பட்டம்பெற்ற அழகியின் சிரிப்பு
காதலியின் முதல்முத்தத்தில் அவன்பூத்த சிரிப்பு...
அத்தனை சிரிப்பிற்கும் சற்றும் சளைக்கவில்லை
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!
சிரிப்பையுங் காசாக்கும் நடிகனின் சிரிப்பு
குருவிற்கு பயந்த மாணவனின் சிரிப்பு
உழைப்பாளி உயிர்பிழியும் முதலாளியின் சிரிப்பு
ஒட்டுபெற வாக்களிக்கும் அரசியல்வாதியின் சிரிப்பு...
அத்தனை சிரிப்பினையும் போலியாய் ஆக்கியது
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!
சுருங்கிய கண்இமைகளும் தோலில்லா நரம்புகளும்
தளர்ந்த நடையும் கூனியத் தோள்களும்
தெளிவில்லா குரலும் பல்லில்லா வாயும்
கிழவனை அருவருப்பாய் காட்டும் அடையாளங்கள்...
அத்தனை அடையாளங்களையும் அழகாய் காட்டியது
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!
வயதெனும் பள்ளத்திலே காமமெனும் தண்ணீரிலே
குளிக்கையிலே உடலன்றி தெரியவில்லை
வயோதிக மேட்டினின்று காதலியைப் பார்கையிலே
உடலிச்சை இல்லாமல் மனமொன்றே தெரியும்
உடல்தாண்டி உணர்வுகளை ஆராதிக்கும்
பல்லில்லா கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு!
சிறிதும் கள்ளம் கபடம் இல்லாதது!
குழந்தையின் சிரிப்பைபோல தீங்கிலாதது!
எதிர்பார்ப்பு ஏதுமில்லை ஏமாற்றும் எண்ணமில்லை
தானென்ற அகந்தையில்லை சுயநலம் சிறிதுமில்லை
அனுபவித்த வாழ்கையில் இன்னும்பெற ஆசையில்லை
நல்லதையே சிந்திக்கும் நல்லதையே போதிக்கும்
அனுபவத்தால் நிரம்பிய கிழவன் சிரிப்பில்
தீமையின் அறிகுறிகள் அணுகூட இருப்பதில்லை.
Monday, November 10, 2008
தாயாகிய ஆண்மகன்!
பொறுப்பும் பொறுமையு மணிகலனாம்
அதனால்
கருவறை பெண்ணிற்கே சொந்தமானது
ஆணாய் பிறந்திட்ட காரணத்தால்
பிரசவிக்கும் சுகமெனக்கு வாய்க்கவில்லை
கருவறைக்குள் அடைகாத்த அன்னையவள்
தொப்புள்கொடி அறுந்த பின்னும்
முடிந்ததென்று ஓடிஒளிந்து கொள்ளாமல்
பாலூட்டி தாலாட்டி சீராட்டினாள்
எனக்காக எனக்காக எனக்காகயென்று
ஓயாமல் பாடுபட்டு தளர்ந்து போகினாள்
மனைவிமாறி தாய்மாறி கிழவிமாறி
தவழுமிவள் இன்றொரு குழந்தையாகினாள்
வாய்ப்பைத் தவறவிட்ட ஆணெனும்நான்
குழந்தையான என்தாய்க்கு தாயாகிறேன்
எவ்வுணவு ஒவ்வுமென அதையறிந்து
பல்லில்லா வாய்மெல்ல சாதகமாய்
பக்குவமாய் சமைத்து ஆறவைத்து
உருண்டையாய் பிடித்து ஊட்டிவிடுவேன்
நெற்றியை விரல்களால் வருடிக்கொண்டே
கதைகள் பலசொல்லித் தூங்கவைப்பேன்
தூங்கிய நொடியே போய்விடாமல்
பக்கத்தில் படுத்தே வெம்மைதருவேன்
படுக்கையில் சிறுநீர் கழித்தாலும்
அறியாமல் மலந்தனைக் கழித்தாலும்
மனதுள்ளுங் கொபங் கொள்ளாமல்
பணிவாய் படுக்கையை சுத்தம்செய்து
மீண்டும் பணிசெய்ய காத்திருப்பேன்
கைகளால் சுமந்துசென்று ஆடைகளைந்து
நித்தம் வெந்நீரால் குளிப்பாட்டுவேன்
சுத்தமானத் துணியால் ஈரம்நீக்கி
புதிதாய் ஆடையுடுத்தி அழகுபார்ப்பேன்
வேதங்கள் சொல்லுகிற கடவுள்தாம்
என்னையும் அன்னையையும் படைத்தானாம்
படைத்ததோ டெல்லாம் முடிந்ததென்று
கடவுளைப்போல் நிறுத்திக் கொள்ளாமல்
தன்னால் இயலும்வரை காத்துநின்றாளே!
இவளைக் கடவுளைவிடவும் மேலென்பேன்
அதனால்
நன்றியை கடவுளுக் கர்ப்பணித்தேன்
அன்பினை அன்னைக் கர்ப்பணித்தேன்
குழந்தையாய் நானிருந்த காலத்திலேயே
அவள்தந்த அன்பினில் துளியைக்கூட
நான்தர வில்லை யென்றாலும்
குழந்தையாய் பாவித்து அணைக்கையிலே
ஆணாயிருந்தும் தாய்மையை உணர்கிறேன்
அதனால்
கருவறை பெண்ணிற்கே சொந்தமானது
ஆணாய் பிறந்திட்ட காரணத்தால்
பிரசவிக்கும் சுகமெனக்கு வாய்க்கவில்லை
கருவறைக்குள் அடைகாத்த அன்னையவள்
தொப்புள்கொடி அறுந்த பின்னும்
முடிந்ததென்று ஓடிஒளிந்து கொள்ளாமல்
பாலூட்டி தாலாட்டி சீராட்டினாள்
எனக்காக எனக்காக எனக்காகயென்று
ஓயாமல் பாடுபட்டு தளர்ந்து போகினாள்
மனைவிமாறி தாய்மாறி கிழவிமாறி
தவழுமிவள் இன்றொரு குழந்தையாகினாள்
வாய்ப்பைத் தவறவிட்ட ஆணெனும்நான்
குழந்தையான என்தாய்க்கு தாயாகிறேன்
எவ்வுணவு ஒவ்வுமென அதையறிந்து
பல்லில்லா வாய்மெல்ல சாதகமாய்
பக்குவமாய் சமைத்து ஆறவைத்து
உருண்டையாய் பிடித்து ஊட்டிவிடுவேன்
நெற்றியை விரல்களால் வருடிக்கொண்டே
கதைகள் பலசொல்லித் தூங்கவைப்பேன்
தூங்கிய நொடியே போய்விடாமல்
பக்கத்தில் படுத்தே வெம்மைதருவேன்
படுக்கையில் சிறுநீர் கழித்தாலும்
அறியாமல் மலந்தனைக் கழித்தாலும்
மனதுள்ளுங் கொபங் கொள்ளாமல்
பணிவாய் படுக்கையை சுத்தம்செய்து
மீண்டும் பணிசெய்ய காத்திருப்பேன்
கைகளால் சுமந்துசென்று ஆடைகளைந்து
நித்தம் வெந்நீரால் குளிப்பாட்டுவேன்
சுத்தமானத் துணியால் ஈரம்நீக்கி
புதிதாய் ஆடையுடுத்தி அழகுபார்ப்பேன்
வேதங்கள் சொல்லுகிற கடவுள்தாம்
என்னையும் அன்னையையும் படைத்தானாம்
படைத்ததோ டெல்லாம் முடிந்ததென்று
கடவுளைப்போல் நிறுத்திக் கொள்ளாமல்
தன்னால் இயலும்வரை காத்துநின்றாளே!
இவளைக் கடவுளைவிடவும் மேலென்பேன்
அதனால்
நன்றியை கடவுளுக் கர்ப்பணித்தேன்
அன்பினை அன்னைக் கர்ப்பணித்தேன்
குழந்தையாய் நானிருந்த காலத்திலேயே
அவள்தந்த அன்பினில் துளியைக்கூட
நான்தர வில்லை யென்றாலும்
குழந்தையாய் பாவித்து அணைக்கையிலே
ஆணாயிருந்தும் தாய்மையை உணர்கிறேன்
Thursday, October 30, 2008
அந்த ஒருத்தி !
நிறத்தினில் வெண்பாலாய் ஒருத்தி - நிறத்தினில்
பாலில்லா தே னீராய் இன்னொருத்தி
குரலினில் மெல்லிசையாய் ஒருத்தி - குரலினில்
இசையில்லா பே ரிரைச்சலாய் இன்னொருத்தி
அன்பினில் மழைநீராய் ஒருத்தி - அன்பினில்
நீரில்லா வற்றிய நதியாய் இன்னொருத்தி
அழகினில் முழுநிலவாய் ஒருத்தி - அழகினில்
நிலவில்லா வெறித்த வானமாய் இன்னொருத்தி
நகைப்பினில் விரிமலராய் ஒருத்தி - நகைப்பினில்
மலரில்லா கற்றாளைச் செடியாய் இன்னொருத்தி
பார்வைதனில் தின்னுமலையாய் ஒருத்தி -பார்வைதனில்
அலையில்லா பெருங் கடலாய் இன்னொருத்தி
கற்பினில் மூடுமாடையாய் ஒருத்தி - கற்பினில்
ஆடையில்லா விலங் கினமாய் இன்னொருத்தி
ஒருத்தி ஒருத்தியாய் பலவொருத்திகள் - இருந்துமென்
அந்த ஒருத்தி இன்னுமேனோ தென்படவில்லை!!!
பாலில்லா தே னீராய் இன்னொருத்தி
குரலினில் மெல்லிசையாய் ஒருத்தி - குரலினில்
இசையில்லா பே ரிரைச்சலாய் இன்னொருத்தி
அன்பினில் மழைநீராய் ஒருத்தி - அன்பினில்
நீரில்லா வற்றிய நதியாய் இன்னொருத்தி
அழகினில் முழுநிலவாய் ஒருத்தி - அழகினில்
நிலவில்லா வெறித்த வானமாய் இன்னொருத்தி
நகைப்பினில் விரிமலராய் ஒருத்தி - நகைப்பினில்
மலரில்லா கற்றாளைச் செடியாய் இன்னொருத்தி
பார்வைதனில் தின்னுமலையாய் ஒருத்தி -பார்வைதனில்
அலையில்லா பெருங் கடலாய் இன்னொருத்தி
கற்பினில் மூடுமாடையாய் ஒருத்தி - கற்பினில்
ஆடையில்லா விலங் கினமாய் இன்னொருத்தி
ஒருத்தி ஒருத்தியாய் பலவொருத்திகள் - இருந்துமென்
அந்த ஒருத்தி இன்னுமேனோ தென்படவில்லை!!!
Friday, October 17, 2008
ஒரு மழைத்துளியின் கனவு!
முத்தாய் மாறிடுங் கனவை சுமந்து
மழைத் துளியாய் ஜென்ம மேடுத்தேன்
கார் மேகத்தி னின்று விடுபட்டு
பெருங் கடலினில் சிப்பியைத் தேடிப்பிடித்து
சூழுகிற துளிகளை யெல்லாம் ஓரங்கட்டி
வருகைக் காய்காத் திருக்கும் இதழ்நோக்கி
இலக்கினை தொடுகிற அரைநொடி முன்னே
காற்றெனும் அம்பு மார்பினில் பாய்ந்து
பெருங்காயத் துடனே கடலினுள் வீழ்ந்தேன்
மாண்டு போனமழைத் துளிக ளெல்லாம்
பிணமாகி நன்னீர் உப்பாய் ஆகியது
தோற்றுப் போனதால் மனம் துவண்டு
சவக் கிடங்கில் வீழ்ந்து கிடக்காமல்
மீண்டு மீண்டும் முத்தாய் பிறக்க
நெருப்பை யுண்டு ஆவி ஆகி
மெல்லமெல்ல மேலேறி ஆகாயம் அடைந்து
மேகத்தின் வியர்வை சுரப்பிக்குள் நுழைந்தேன்
பரந்த ஆகாய குடிலி னுள்ளே
குளிர்ந்த காற்று இதமாய் தழுவ
ஆண் மேகமும் பெண் மேகமும்
காதல் கொண்டுக் கட்டிப் புரள
வியர்வை சுரப்பியி லிருந்து விடுபட்டு
மழையாய் மாறிய துளியி லொன்றாய்
மேகத்தை விட்டு பயண மானேன்
தலைவிதி என்னை அலைக் கழிக்க
மலை சரிவில் துளியாய் நான்வீழ்ந்தேன்
மிகநீண்ட முயற்சி பலன் கொடுக்க
துளிகளை சேர்த்து அருவியாய் மாறி
காடுமேடு பள்ள மெல்லாம் கடந்து
மறுபடி பெருங்கடல் அடைத்து விட்டேன்
முத்தாய் மாறிடுங் கனவை சுமந்து
பிறிதோர் பயணத்திற் குத்தயா ராகிறேன்
மழைத் துளியாய் ஜென்ம மேடுத்தேன்
கார் மேகத்தி னின்று விடுபட்டு
பெருங் கடலினில் சிப்பியைத் தேடிப்பிடித்து
சூழுகிற துளிகளை யெல்லாம் ஓரங்கட்டி
வருகைக் காய்காத் திருக்கும் இதழ்நோக்கி
இலக்கினை தொடுகிற அரைநொடி முன்னே
காற்றெனும் அம்பு மார்பினில் பாய்ந்து
பெருங்காயத் துடனே கடலினுள் வீழ்ந்தேன்
மாண்டு போனமழைத் துளிக ளெல்லாம்
பிணமாகி நன்னீர் உப்பாய் ஆகியது
தோற்றுப் போனதால் மனம் துவண்டு
சவக் கிடங்கில் வீழ்ந்து கிடக்காமல்
மீண்டு மீண்டும் முத்தாய் பிறக்க
நெருப்பை யுண்டு ஆவி ஆகி
மெல்லமெல்ல மேலேறி ஆகாயம் அடைந்து
மேகத்தின் வியர்வை சுரப்பிக்குள் நுழைந்தேன்
பரந்த ஆகாய குடிலி னுள்ளே
குளிர்ந்த காற்று இதமாய் தழுவ
ஆண் மேகமும் பெண் மேகமும்
காதல் கொண்டுக் கட்டிப் புரள
வியர்வை சுரப்பியி லிருந்து விடுபட்டு
மழையாய் மாறிய துளியி லொன்றாய்
மேகத்தை விட்டு பயண மானேன்
தலைவிதி என்னை அலைக் கழிக்க
மலை சரிவில் துளியாய் நான்வீழ்ந்தேன்
மிகநீண்ட முயற்சி பலன் கொடுக்க
துளிகளை சேர்த்து அருவியாய் மாறி
காடுமேடு பள்ள மெல்லாம் கடந்து
மறுபடி பெருங்கடல் அடைத்து விட்டேன்
முத்தாய் மாறிடுங் கனவை சுமந்து
பிறிதோர் பயணத்திற் குத்தயா ராகிறேன்
Subscribe to:
Posts (Atom)