Thursday, October 30, 2008

அந்த ஒருத்தி !

நிறத்தினில் வெண்பாலாய் ஒருத்தி - நிறத்தினில்
பாலில்லா தே னீராய் இன்னொருத்தி

குரலினில் மெல்லிசையாய் ஒருத்தி - குரலினில்
இசையில்லா பே ரிரைச்சலாய் இன்னொருத்தி

அன்பினில் மழைநீராய் ஒருத்தி - அன்பினில்
நீரில்லா வற்றிய நதியாய் இன்னொருத்தி

அழகினில் முழுநிலவாய் ஒருத்தி - அழகினில்
நிலவில்லா வெறித்த வானமாய் இன்னொருத்தி

நகைப்பினில் விரிமலராய் ஒருத்தி - நகைப்பினில்
மலரில்லா கற்றாளைச் செடியாய் இன்னொருத்தி

பார்வைதனில் தின்னுமலையாய் ஒருத்தி -பார்வைதனில்
அலையில்லா பெருங் கடலாய் இன்னொருத்தி

கற்பினில் மூடுமாடையாய் ஒருத்தி - கற்பினில்
ஆடையில்லா விலங் கினமாய் இன்னொருத்தி

ஒருத்தி ஒருத்தியாய் பலவொருத்திகள் - இருந்துமென்
அந்த ஒருத்தி இன்னுமேனோ தென்படவில்லை!!!

No comments: