(ஹைக்கூ - ஜப்பானிய மொழியில் எழுதப்படும் ஒரு வகை கவிதை. மூன்று வரிகளில் இடம் பெரும் இக்கவிதை, 5-7-5 என்னும் அசைகளில் 3 வரிகளில் இடம் பெறும்முதல் வரி - ஒரு குறிப்பை அல்லது நிகழ்வை குறிக்கும். இரண்டாவது வரி - முதல் வரிக்கு முரண்பாடான குறிப்பை அல்லது நிகழ்வை குறிக்கும். மூன்றாவது வரி - முதல் இரண்டு வரிகளையும் தொடர்பு படுத்திய இன்னொரு குறிப்பை அல்லது நிகழ்வை குறிக்கும். இதை ஒரு வழிகாட்டுதலாக எடுத்து, தமிழில் 4-5-4 எனும் முறையில் கவிதை எழுத முற்படுகிறேன்.)
இரவினில் தொலைந்த விண்மீ னிரண்டு
வெயிலில் கறுத்து பகல் வெளிச்சத்தில் வெளிப்பட்டது
இமைகள் மூடிய உனது விழிகள்!
வான வில்லின் நிறங்கள் ஏழென்பர்
ஒற்றைநிற வான வில்லைதான் தினமுங் காண்கிறேன்
காரிருள் வர்ணத்தில் உனது புருவங்கள்!
பௌர்ணமி கழிந்து அமாவாசை யானது
வடிவம் பிறையாக தேயவில்லை பொலிவுங் குறையவில்லை
களங்கமிலா முழுநிலவாய் உனது முகம்!
சூரியனை விடாமல் பார்க்கும் சூரியகாந்தி
தரிசனம் கிடைத்தும் தலைநிமிர்ந்து பார்க்க தயக்கம்
கன்னஞ் சிவந்த உனது வெட்கம்!
சொன்னதைச் சொல்லுமாங் கிளிப் பிள்ளை
திரும்ப திரும்ப சொல்லியுஞ் சொல்ல மறுப்பதேன்
காதலை சொல்லியும் உனது மௌனம்
வருடத்தில் மூன்று திங்கள் வசந்தம்
என்குடிலுக்கு மட்டும் வருடத்தில் ஒரே தினம்
கல்லறைமுன் மலர் செண்டுடன் நீ!
பூமிக்குள் புதைந்து போன யென்னை
பெயர்சொல்லி எழுப்பினள் முத்த மிட்டுத் தழுவினள்
அவள்பெற்ற பிள்ளைக்கு எனது பெயர்!
No comments:
Post a Comment